Monday, January 2, 2012

புது வருட உறுதிமொழிகள்

சென்ற வருட உறுதிமொழிகளை அப்படியே திரும்பவும் எடுக்க உள்ளேன், மற்றும் சில எண்ணங்களுடன். சென்ற வருடம் எனது உறுதிமொழிகள் நான்கு. முதலாவது அதிகமாக இடுகைகள் எழுதுவது பற்றியது. 2010 ல் இருந்ததை விட இப்போது சிறிய முன்னேற்றம். 2008 இடுகைக்கு பிறகு 2011ல்  தான் எனது இரண்டாவது பதிவு இருந்தது. ஆனால் 2011 ல் பத்து பதிவுகள் எழுதியுள்ளேன். மாசத்துக்கு ஒன்று கூட எழுதவில்லை என்றாலும் ஒப்பீட்டு அளவில் முன்னேற்றம் என்று தான் கொள்ளவேண்டும். முழு வெற்றி இல்லை என்பதால் அப்படியே தொடர்கிறது இந்த வருடத்திற்கும்.


இரண்டாவது உறுதிமொழி டயரி எழுதுவது பற்றியது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை அப்படியே தொடர்கிறது. மூன்றாவது உறுதிமொழி கேலி கூத்தாகிவிட்டது. ஒரு அடி கூட நகரவில்லை. கதைகள் எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஒரு வெள்ளை காகிதத்தில் 'அ' கூட போடவில்லை. ஆகவே இந்த வருடமும் இரண்டு உறுதிமொழிகளும் தொடர்கின்றன.

நான்கவதாக எடுத்து கொண்ட உறுதிமொழி வளரும் தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்வது.இதில் கட்டாயம் வெற்றி பெற்றேன் என்றே சொல்ல வேண்டும்.மெகா கணினியம் பற்றி தெரிந்து கொண்டேன். மேலும் பல தொகுப்பு வலை தளங்களை பின்பற்றி சிறிதளவு முன்னேற்றம் அடைந்தேன். அகவே இந்த உறுதிமொழி வெற்றி பெற்றதாகவே கொள்ள வேண்டும். அதனால் இந்த உறுதிமொழி முன்னேற்றம் அடைகிறது. நீண்ட நாட்களாக நான் படித்து தெரிந்து கொள்பவற்றை மாணவர்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் ஒரு மின் பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் அது இழுத்து கொண்டே போகிறது. அகவே அதனை தொடங்கி வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது புது உறுதிமொழி.

அதை போல் இந்த வருடத்தில் ஆராய்ச்சி படிப்பில் என்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்க்கு தேவையான முன்னேற்பாடுகளை தொடங்கி சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அடுத்த உறுதிமொழி. பாப்போம் ஒரு வருடம் கழித்து.

 

4 comments:

Philosophy Prabhakaran said...

// 2011 ல் பத்து பதிவுகள் எழுதியுள்ளேன் //

இதுக்கு பேர்தான் அதிக இடுகைகளா... இந்த ஆண்டின் மினிமம் டார்கெட் 50 வைத்துக்கொள்ளவும்... வாரத்திற்கு ஒன்று...

Philosophy Prabhakaran said...

வாழ்த்துகள் Dr.சுதன்...

Philosophy Prabhakaran said...

புத்தக கண்காட்சிக்கு வருவதாக இருந்தால் தகவல் தெரிவிக்கவும்...

சுதன் said...

இந்த தடவை புத்தக கண்காட்சிக்கு வர பொருளாதார நிலைமை இடம் கொடுக்கவில்லை, மேலும் படிக்காமல் நிறைய புத்தகங்கள் உள்ளன. அதேபோல் நீங்கள் கூறியபடி வரம் ஒரு பதிவாவது எழுத முயற்சிக்க போகிறேன்