Monday, November 3, 2008

வாழ்க்கை

வாழ்க்கை எப்படி எல்லாம் நம்மோடு விளையாடி நம்மை அலைகழிக்கும் என்பதை நேரில் பார்த்த தாக்கம் தான் இந்த பதிவு.நான் வழக்கமாக போகும ஒரு ஜூஸ் கடை முதலாளியை பற்றியது இந்த பதிவு. ஊரின் மிகவும் மையமான கடை தெருவில் இருந்தது அவரின் கடை. யோசித்து பாருங்கள் அவர் வாழ்கையை பற்றி. என்றாவது ஒரு நாள் தன் கடை போய் தான் ஒரு கடையில் வேலைக்கு சேரும் நிலைமை வரும் என அவர் கனவிலாவது நினைத்து பார்த்திருப்பாரா. அவரை என் வீதிக்கு அருகில் இருக்கும் கடையில் பார்த்த போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கடையின் சொந்தகாரர் கடையை இடித்து விரிவுபடுத்தி கட்ட போவதாகவும் அதனால் காலி செய்ய சொல்லிவிட்டார் என கூறினார். மறுபடியும் அதே இடத்தில் கடை வாங்க முன்பை விட அதிகமான அட்வான்ஸ் கட்ட வேண்டி வருவதால் தன்னால் முடியாது என்று கடையை விட்டு வேலைக்கு சேர்ந்ததாக கூறினார். இதன் மூலம் நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. கடை சொந்தகாரருக்கு கடையை மாற்றுவதின் மூலம் வருமானம் அதிகமாகும். அது அவரின் தேவை. ஆகவே அவரை குற்றஞ் சொல்ல முடியாது. அதே போல் இவர் எதுவும் தவறு செய்யவில்லை. மையமான இடத்தில் கடை சுமாரான வருமானம் என்று இருந்த இவர் எதிர்பார்த்திருப்பாரா தனக்கு வரப்போகும் இந்த நிலையை பற்றி. வாழ்க்கை பல முறைகளில் தன் உறுதி இல்லாத நிலைமையை வெளிபடுதிக்கொண்டு தான் இருக்கிறது. மனிதனும் அதை வெல்ல துடித்துக்கொண்டு தான் இருக்கிறான்.